Header Ads

தேவடிகளார் ‘தேவதாசி’ ஆனது எப்படி?

தேவடிகளார் ‘தேவதாசி’ ஆனது எப்படி?

தேவடிகளாரின் கடமை என்ன?

பாடல்கள் இசைப்பதும், நடனமாடுவதும்தான் கோயில்களில் அவர்களின் பொதுவான கடமைகளாக இருந்தன.

செல்வத்தை கொள்ளையடித்தல், கிறித்துவத்தைப் பரப்புதல், மக்களைக் கூலியாளிகளாக்குதல் போன்ற கொள்கைகளோடு பிரிட்டிஷ்காரர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தனர். அதனால், தமிழர் மரபுகள் எல்லாம் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் தேவடிகளார் முறை. தேவடிகளாரை காசுக்காக தெருவில் ஆடும் கீழ்த்தரமான பெண்கள் என கருதினர்.

சோழர் காலத்தில் தேவடிகளார்?

தேவடிகளார் என்பவர் ஆண்களும் பெண்களும், இறை தொண்டுக்காகவும் கலை தொண்டுக்காகவும் சமூக சேவைக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஆவர். தஞ்சாவூர் பெரிய கோவிலில், 400 தேவடிகளார் (ஆண்கள் பெண்கள், இசையாளர், நடனக் கலைஞர்கள் போன்றோர்) சோழர் காலத்தில் இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

நட்டுவானர்கள் எனப்படுபவர்கள் தேவடிகளார்க ஆடுவதற்கு இசையமைப்பவர்கள் ஆவர். ஆகம முறைப்படி கோவில்களில் பாட்டும் நடனமும் தேவையான ஒன்று. ஆட்டமும் பாட்டமும் உள்ளக் களிப்பை ஏற்படுத்தும். மேலும், அவை தான் ஒரு இனத்தின் அடையாளம். அந்த அடையாளத்தைப் பேணி காத்து வந்தவர்கள் தான் தேவடிகளர்.

திருவிழாக்களிலும், இறை காரியங்களிலும் தேவடிகளாரின் வருகை மிகவும் உன்னதமாகக் கருதபட்டது. அவர்களின் பிள்ளைகள் சமூகத்தில் உயர்வாகப் போற்றப்பட்டனர். ஆனால், இப்பொழுது அவர்களின் நிலை முற்றிலும் தப்பான ஒன்றாகி விட்டது. விபச்சாரம் செய்பவர்கள் தேவடிகளார் என்று மாறிவிட்டது. இன்றைய நிலையில் தேவடிகளார் மரபு அழிந்து விட்டது என்றாலும், அவர்களின் புகழ் மறைந்து அவர்கள் கீழ்த்தரமானவர்கள் என்றே அறியப்படுகின்றனர்.
Theme images by follow777. Powered by Blogger.