V சிட்- அப்ஸ் (V SIT - UPS)
V SIT UPS WORKOUT
பயிற்சி செய்யும் முறை:
சமமான தரையில் மல்லாந்த நிலையில் படுத்துகொள்ளுங்கள். இரு கைகளையும் உங்கள் தலையை ஒட்டி நீட்டிய நிலையில் தரைக்கு சற்று மேலாக இருக்கும்படி நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் பயிற்சியின் ஆரம்ப நிலை.
ஆரம்ம்ப நிலையை சரியாக புரிந்துகொள்ள முதல் படத்தை கவனியுங்கள். இந்த நிலையிலிருந்து சற்று வேகமாக ஒரே சமயத்தில் அப்பர்பாடியையும் லோயர் பாடியையும் மேலே உயர்த்துங்கள். உங்கள் கை வ்ரல் நுணியால் கால் விரலை தொட முயலுங்கள். இப்படி முடிந்த அளவுக்கு உயர்த்திவிட்டு மெல்ல கண்ட்ரோலுடன் ஆரம்ப நிலைக்கு வாருங்கள். அப்பர் பாடியையும் லோயர் பாடியையும் ஒரே சமயத்தில் மேல் நோக்கி கர்ல் பண்ண வேண்டிய முறையை இரண்டாவது வரை படத்தை பாருங்கள்.
மீண்டும் மீண்டும் இதே போல் சுமார் 15-20 ரெப்ஸ் வீதம் 3 (அ) 4 செட்ஸ் செய்யுங்கள்.
இந்த பயிற்சியில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
அப்பர் பாடியையும் லோயர் படியையும் மேல் நோக்கி கர்ல் பண்ணும்போது மூச்சை வெளியேற்றிவிட்டு மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரும்போது மூச்சை உள்ளிழுங்கள். உடலை மேலே கர்ல் பண்ணும் போது மட்டுமே சட்று வேகமாக கர்ல் செய்யலாம். கீழே இறக்கி ஆரம்ப நிலைக்கு வரும் போது மிக மெதுவாக வரவேண்டும். செட் முடியும் வரை அப்டமனில் டென்ஷனை மெய்ண்டெய்ன் செய்யுங்கள். ஒரே சமயத்தில் உங்கள் அப்பர் அப்டமனையும், லோயல் அப்டமனையும் கதறவைக்கும் சூப்பர் பயிற்சி இது.