ஹேங்கிங் சைடு TO சைடு நீ ரெய்சஸ் (HANGING SIDE TO SIDE KNEE RAISE)
ஹேங்கிங் சைடு TO சைடு நீ ரெய்சஸ் (HANGING SIDE TO SIDE KNEE RAISE)
பயிற்சி செய்யும் முறை:
லோயர் அப்டமன், எக்ஸ்டர்னல் ஆப்ளிகஸ், இண்டர் கோஸ்டல்ஸ் ஆகியவற்றை அட்டகாசமாக டெவலப் பண்ணிவிடக்கூடிய சிற்ப்பான பயிற்சி இது. பாரில் தொங்கியபடி முதல் ரெப்ஷனை முட்டியை மடக்கியபடி நேராகவே மேல் நோக்கி ரெய்ஸ் பண்ணவேண்டும். முடிந்த அளவுக்கு ரெய்ஸ் பண்ணி அப்டமனை நன்கு நசுக்கிவிட்டு.... மெல்ல கீழ் நோக்கி இறக்க வேண்டும். அடுத்த ரெப்ஷனில் படத்தில் காட்டி உள்ளபடி முட்டிகளை வலது புறமாக ட்விஸ்ட் பண்ணியபடி உயர்த்தி இறக்கவேண்டும். அதற்கடுத்த ரெபடிஷனில் முட்டிகளை இடதுபுறமாக ட்விஸ்ட் பண்ணியபடி உயர்த்தி இறக்க வேண்டும். இப்படியெ மூன்று முறைகளிலுமாக ஒரு செட்டுக்கு 15-20 ரெப்ஸ் வீதம் 3 செட்ஸ் செய்ய வேண்டும்.