ரிவர்ஸ் க்ரன்ச்சஸ் (REVERSE CRUNCH)
ரிவர்ஸ் க்ரன்ச்சஸ் (REVERSE CRUNCH)
பயிற்சி செய்யும் முறை:
இதோ லோயர் அப்டமன் துண்டுகளை அசத்த்லாக கொண்டுவரக்கூடிய அடுத்த பயிற்சி. பார்க்க எலிய பயிற்சி போலத் தெரியும் ஆனால் செய்யும் போதுதான் இப்பயிற்சி அடிவயிற்றை எப்படி கசகிப் பிழிகின்றது எல்று தெரியும். FLAT பெஞ்ச்சில் மல்லாந்த நிலையில் படுத்து இரு கைகளால் தலைக்குப் பக்கவாட்டில் பெஞ்ச் விளிம்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இரு கால்களையும் உயர்த்தி 90 டிகிரி கோணத்தில் L வடிவில் நிலையாக நிருத்திக்கொள்ள வேண்டும். இது பயிற்சியின் ஆரம்ப நிலை.
இந்த நிலையிலிருந்து... பட்டக்சை பெஞ்ச் பலகையை விட்டு மேல் நோக்கி உயர்த்தவேண்டும். அதிகப்பசமாக உயர்த்தி .. அதாவது படத்தில் உள்ளது போல் உயர்த்தி இரு வினாடிகள் நிறுத்தி வைத்து மெல்ல பட்டக்சை கீழிறக்கி பெஞ்ச் பலகையைத் தொடும்படி செய்ய வேண்டும். ஒவ்வொரு... செட்டிலும் குறிப்பிட்ட அளவு ரெபடிஷன்களை செய்து முடிக்கும் வரை... மேலே உயர்த்திய கால்களை அதே 90 டிகிரி கோணத்திலேயே இருக்க வேண்டும்.