Header Ads

அப்டமன் க்ரன்ச்சஸ் ( ABS CRUNCHES)

அப்டமன் க்ரன்ச்சஸ் ( ABS CRUNCHES)


பயிற்சி செய்யும் முறை:
                                                       அப்பர் அப்டமனுக்கான அடுத்த பயிற்சி இது...
எனபதோடு இந்த அப்டமன் ருடீனின் கடைசி பயிற்சியும் இதுதான். இதற்க்கு முன் செய்த மூன்று பயிற்சியினாள் அப்டமன் நன்கு டைட் ஆகி கடினமாக இருக்கும் அதைமேலும் நெருக்கி கசகிபிழியும் விதத்தில் க்ரன்ச்சஸ் பயிற்சி செய்ய வேண்டும். சமமான தரையில் மல்லாந்து படுத்து இரு கால்களையும் மடித்த நிலையில் உயர்த்தி ஒரு ஸ்டூல் அல்லது FLAT பென்ச் மீது வைத்துக்கொள்ள வேண்டும் இரு கைலளையும் தலைக்கு சப்பேர்டாக பக்க வாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இது பயிற்சியின் ஆரம்ப நிலை.

இந்த நிலையில் இருந்து அப்பர் பாடியை மேல் நோக்கி கர்ல் பண்ண வேண்டும். இந்த கட்டத்தில் பல பேர் செய்யும் தவறு ஒன்றை சுட்டி காட்ட விரும்புகிரேன். அதிகபச்சமாக அப்பர் பாடியை மேலே கர்ல் பண்ணிணால் தான் அதிக பலன் கிடைக்கும் என்று தவறாக என்னிக் கொண்டு மிக வேகமாக அப்பர் பாடியை மேலே உயர்த்தி இறக்குகிறார்கள் இப்படி செய்வதால் அப்டமன் டென்ஷனை இழந்து விடுகின்றது இது பயனற்ற முறை.

அப்டமனை நன்கு டைட் பண்ணிய படி படதில் உள்ள அளவுக்கு உயர்த்தி  MAXIMUM SQUEEZE செய்து 2 வினாடிகள் அப்படியே நிருத்தி மெல்ல கன்ரேலுடன் இறக்க வேண்டும். குறிப்பிட்ட ரெபிடிஷன்களை செய்து முடிக்கும் வரை அப்டமினில் டென்ஷனை மெயிண்டெயின் செய்ய வேண்டும்.

இப்பயிற்சியையும் ஒரு செட்க்கு 20-25 ரெப்ஸ் வீதம் செய்ய வேண்டும்.
Theme images by follow777. Powered by Blogger.