Header Ads

SUPER BICEPS SET(சூப்பர் பைசெப் செட்)

SUPER BICEPS SET(சூப்பர் பைசெப் செட்)

பாடிபில்டிங் பயிற்சிகளில் எந்தப் பயிற்சியிலும் குறிப்பாக பார் பெல்லைக் கொண்டு செய்யக்கூடிய பயிற்சிகளில் குறிப்பிட்ட ஒரே இடத்தில்  பிடித்துக் கொண்டு பயிற்சி செய்வதைவிட வெவ்வேறு இடத்தில்.. அதவது பார்பெல் ராடை மீடியம் கிரிப்பாக.., க்ளோஸ் கிரிப்பாக.., வைடு கிரிப்பாக என மாற்றி மாற்றி பிடித்து பயிற்சி செய்வதில் கூடுதல் பலன்கள் கிடைக்கின்றன.

உங்கள் பைசெப்சை சூப்பராக டெவலப் பன்ணிவிடும் ஒரு டெக்னிக்கைதான் இப்பொழுது உங்களுக்கு சொல்லப்போகிறேன்.



பைசெப்சின் சூப்பர் மாஸ்க்கு முதலிடதில் உள்ள பயிற்சி பார்பல் கர்ல் பயிற்சிதான். பார்பெல்கர்ல் பயிற்சியின் மூலம் டோட்டல்  பைசெப்சின் MASS-ம் கூடும்.. என்ற போதிலும் இப்பயிற்சியைச் சற்றே வித்தியசமாக மாற்றிச் செய்வதின் மூலம் விதியாசமான பலன்களைப் பெறலாம் .

பார்பெல் ராடை உங்கள் தோள்களின் அகலத்தில் பிடித்துக்கொண்டு கர்ல் செய்வது வழக்கமானமுறை. இதிலிருந்து வித்தியாசமாக  தோள்களின் அகலத்தைவிட கூடுதல் அகலமாக அதாவது வைடு கிரிப்பாக பார்பெல் ராடைப் பிடித்துக்கொண்டு கர்ல் செய்வதின் மூலம் பைசெப்ஸின் உட்பகுதி (INNER BICEP) சூப்பராக டெவலப் ஆகும் ஷொல்டர் அகலத்தைவிடக் குருகலாக அதாவது க்ளோஸ் கிரிப்பாக ராடை பிடித்து கொண்டு கர்ல் செய்வதின் மூலம் பைசெப்ஸின் வெளிப்பகுதி (OUTER BICEPS) சூப்பராக டெவலப் ஆகும்.

உங்களில் விஷயம் தெரிந்தவர்கள் அவுட்டர் பைசெப்சையும் இன்னர் பைசெப்சையும் டெவலப் பண்ணுவதற்கு நேரோ கிரிப் (க்ளோஸ் கிரிப்) பார்பெல் கர்ல் பயிற்சியையும்தனிதனியாக செய்திருப்பீர்கள் இப்பொழுது நான் சொல்லப் போவது புதிய டெக்னிக் இருவிதமான கிரிப்களையு ஓரே செட்டில் இணைத்துச் செய்யவேண்டும்.

நேரோ TO வைடு பார்பெல் கர்ல்:

உங்களது 1 ரெப் மேக்ஸிமம் எடையில் சுமார் 60% அளவுக்கு எடையுள்ள பார்பெல்லை உங்கள் கைகளில் தொங்கிய நிலையில் பிடித்துக் கொள்ளுங்கள். பார்பெல் ராடைப் பிடித்துள்ள உங்கள் இரு கைகளுக்கும் இடையில் 6 அங்குல இடைவெளி மட்டுமே இருக்க வேண்டும். இதில் உங்களால் எவ்வளவு ரெப்ஸ் கர்ல் பண்ண முடிகிறதோ அவ்வளவு செய்யுங்கள். செய்துவிட்டு கீழே வைத்துவிடாம்ல் அப்படியே கைகளை அகட்டி பார்பெல்ராடை உங்கள் தோள்களின் அகலத்தைவிட கூடுதல் அகலமாக வைடு கிரிப்பாகப் பிடித்துக்கொண்டு மேலும் சில ரெப்டிஷன்ஸ் கர்ல் செய்யுங்கள். இனிமேல் ஒரே ஒரு ரெப் கூடச் செய்ய முடியாது என்ற கட்டம் வரை செய்துமுடியுங்கள். ஒரு நிமிடம் ஓய்வு கொடுத்து அடுத்த செட் என் சுமார் 4 செட்ஸ் செய்யலாம்.செய்து முடிக்கும்போது உங்கள் பைசெப்சுக்குக் கிடைக்கும் சூப்பர் PUMP-ஐக் கவனியுங்கள்.பைசெப்ஸ் பிதுங்கி வெளியே வந்துவிடுவது போல் உப்பிப் புடைத்துகொண்டிருக்கும். உங்கள் பைசெப்ஸ் ருட்டீனில் இந்த பயிற்சியையும் இணைத்துக் கொண்டு சில வாரங்கள் செய்துபாருங்கள். உங்கள் பைசெப்சின் வித்தியாசமான டெவலப்மெண்ட் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.















Theme images by follow777. Powered by Blogger.