VERTICAL LEG PRESS
VERTICAL LEG PRESS
தொடைகளின் MASS-ஐ அட்டகாசமாக அதிகரிக்கச் செய்யும் பயிற்சிகளில் ஒன்று வெர்டிகல் லெக் ப்ரஸ்.
பயிற்சி செய்யும் முறை:
கால் முட்டிகள், லோபேக் போன்றவற்றை நன்கு வாம் அப் பண்ணிக் கொள்ளுங்கள். மெஷினில் போதுமான எடை உள்ளதா என பார்த்து கொள்ளுங்கள். ப்லாட்பாமில் முதுகு தலையும் நன்கு படிந்திருக்கும்படி மல்லாந்த நிலையில் படுங்கள். கால்களை உயர்த்தி பாதங்களை புஷ் பண்ணும் பலகையில் படிய வைத்துகொள்ளுங்கள். இது பயிற்சியின் ஆரம்ப நிலை. கால்களை கொஞ்சமாக ப்ரெஸ் செய்து லாக்கை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது மெஷினில் மாட்டியுள்ள எடை உங்கள் கால்களை கீழ் நோக்கி அழுத்தும். உங்கள் கால்முட்டி மார்பை தொட முயலும் படியாக நன்கு இறக்கி உடனே மேல் நோக்கி ப்ரஸ் பண்ணுங்கள்.
கால்களில் முழு நீளத்திற்க்கும் ப்ரஸ் பண்ணுங்கள். ஆனால் கால் முட்டிகளை லாக் பண்ணக்கூடாது. முழு ரெப்டிஷன்களையும் செய்து மிடிக்கும் வரை கால் முட்டி லேசான பெண்ட்-ஐ மெய்ண்டெய்ன் செய்யுங்கள். குறிப்பிட்ட ரெபடிஷன்களை செய்து முடித்த பிறகு மெஷினை லாக் செய்து எழுந்து விடுங்கள்.
ஒரு செட்டுக்கு சுமார் 12-15 ரெப்ஸ் வீதம் 4 செட்ஸ் செய்யலாம்.