Header Ads

WHY DO HAMMER CURL

WHY DO HAMMER CURL




ஆர்ம்ஸ் பயிர்சிகளில் முக்கியமனதொரு பயிற்சி  ஹேமர் கர்ல் .
பைசெப்ஸ், ட்ரைசெப்ஸ் ஆகிய இரு தசைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பிரேக்கியாலிஸ் என்ற தசையை டெவலப் பண்ணிவிட இந்த ஹேமர் கர்ல்..
பயிற்சிக்கு இணையான இன்னோரு பயிற்சியே கிடையாது என்பதுதான் உண்மை.
பிரேக்கியாலிஸ் தசை சாதாரணமாக வெளிப்பார்வைக்குத் தெரியாது. இதனால் இந்தத் தசை அவ்வளவாக முக்கியம் இல்லாதது என்று பலர் நினைக்கிறார்கள். இது தவறு இந்த தசையை எவ்வளவுகெவ்வளவு டெவலப் பண்ணுகிறீர்களோ அவ்வளவுக்கு உங்கள் பைசெப்ஸ் பீக்கை அதிகப்படுத்திக் காட்டவும், ஆர்ம்ஸ் சுற்றளவை அதிகரிக்கச் செய்யயும் மறைமுகமாக உதவுகிறது பிரேக்கியாலிஸ்.

ஹேமர் கர்ல் பயிற்சியானது பிரேக்கியாலிஸ் தசைகளை மட்டுமின்றி பைசெப்ஸ், ஃபோர் ஆர்ம்ஸ் ஆகியவற்றையும் மிகச் சிறப்பாக டெவலப் பண்ணி விடுகின்றது. இதன் காரண்மாகதான் இன்றைய உலகின் முன்னணி பாடிபில்டர்கள் அவ்வளவு பேருமே ஹேமர் கர்ல் பயிற்சியைத் தவறாமல் செய்கிறார்கள். 

இரு டம்பெல்களை இரு கைகளில் தொங்கிய நிலையில் நியூட்ரல் கிரிப்பாகப் பிடித்துக் கொண்டு அப்படியே இரு டம்பெல்களையும் தோள்களை நோக்கி கர்ல் பண்ணி பைசெப்சை நன்கு SQUEEZE பண்ணி இரு வினாடி நிறுத்தி மெல்ல கண்ட்ரோலுடன் டம்பெல்ளை ஆரம்ப நிலைக்கு இறக்குங்கள். 

மீண்டும் மீண்டும் இதே முறையில் குறிப்பிட்ட ரெபடிஷன்களைச் செய்யுங்கள். மேலும்  இப்படி செய்வற்குப் பதிலாக ஒரு கையில் மட்டும் டம்பெல்லை எடுத்துக்கொண்டு உடலுக்கு குறுக்காக தோளை நோக்கி கர்ல் பண்ணியும் இறக்கியும் செய்யலாம். 






















Theme images by follow777. Powered by Blogger.